வீக் போட்டியாளர்கள்.. சாச்சனாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. வேற லெவல் புரமோ..!

  • IndiaGlitz, [Sunday,October 13 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை முதல் நாளே செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாக கொண்டு சென்றது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று மீண்டும் விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், இன்றைய முதல் புரோமோவில் அவர் சாச்சனாவிடம், பெண்கள் அணியில் ஒரு மூன்று பேர் வீக்காக இருக்கிறார்கள் என்று சொன்னியே, அதை அவர்களுக்கும் சொன்னியா என்று கேட்க, இல்லை, என்று சாச்சனா கூறினார்.

உடனே விஜய் சேதுபதி, ரவீந்தர் சார், சாச்சனா உங்க கிட்ட என்ன சொன்னார் என்று கேட்க, உடனே ரவீந்தர், ’அன்சிகா, சௌந்தர்யா, சுனிதா ஆகியோர் வீக் போட்டியாளர்கள் என சாச்சனா கூறியதாக தெரிவித்தார். உடனே சாச்சனா சமாளித்து, நான் சொன்னேன், ஆனால் அதற்கு விளக்கம் கொடுத்தேன், என்று சொல்ல, பெண்கள் அணியில் வீக்காக இருக்கிறார்கள் என்று உனக்கு தோன்றியது அல்லவா, நீ ஏன் அவர்களிடம் இதை சொல்லவில்லை, என்று கேட்டார்.

அதற்கு சுனிதா, எனக்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. அதுதான் நம்மளோட யூனிட்டி மண்ணாங்கட்டி என்று பேசிக் கொண்டிருக்கிறோம், வீக்கர் என்பதை அங்கே சொல்லாமல் நம்ம கிட்ட சொல்லி இருக்கலாம், என்று கூறினார். இதனால் சாச்சனா முகம் இறுகியதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

எனவே, இன்றைய எபிசோடில் சாச்சனாவை விஜய் சேதுபதி மற்றும் பெண்கள் அணியினர் வறுத்தெடுத்திருப்பார்கள் என்பது இந்த ப்ரோமோவில் இருந்து தெரிய வருகிறது.

More News

ஒரு மாதத்திற்கு பின் 'கோட்' வெற்றி விழா கொண்டாட்டம்: விஜய் பங்கேற்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒரு மாதம் கழித்து படக்குழுவினர் வெற்றியை

இதுதான் முதலும் கடைசியும்.. சாச்சனாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்ட சாச்சனா மீண்டும்  என்ட்ரி   ஆகியுள்ள நிலையில் அவருக்கு பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு எச்சரிக்கையும்

ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக்? என்ஜாய் என நெட்டிசனுக்கு பதில் அளித்ததால் பரபரப்பு..!

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக் ஆனதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு அவர் 'என்ஜாய்' என நெட்டிசன்களுக்கு பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி 5 வருடத்திற்கு இந்த மாதிரி படம் இல்லை.. லோகேஷ் கனகராஜ் பேட்டி..!

இனி ஐந்து வருடங்களுக்கு கத்தி, துப்பாக்கி, ரத்தம் இல்லாமல் படம் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிரடி ஆக்சன்.. மலைக்க வைக்கும் கிராபிக்ஸ்.. சிரஞ்சீவி, த்ரிஷாவின் 'விஸ்வாம்பரா' டீசர்..!

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'விஸ்வாம்பரா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு