கேட்ட கேள்விக்கான பதிலை சொல்லுங்க.. தர்ஷா குப்தாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய விஜய் சேதுபதி எபிசோடு வழக்கத்தை விட சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் தர்ஷா குப்தாவை விஜய் சேதுபதி வறுத்தெடுக்கும் காட்சிகள் உள்ளன. ’இங்கே ஒரு குழாயடி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் முட்டை அவசியமா? என்று தர்ஷா குப்தாவிடம் கேட்க, அவர் ’எல்லாருக்கும் பங்கு வைக்கிறார்கள் என சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இடைமறித்த விஜய் சேதுபதி, உங்களுக்கு ஃபேவரான பதிலை சொல்லாதீர்கள், கேட்ட கேள்விக்கான பதிலை சொல்லுங்கள் என்று கூறுகிறார்.

உடனே, அன்ஷிதா ஆரம்பத்திலிருந்தே பாகுபாடு கொண்டிருந்தார், சுனிதாவுக்கு என தனியாக எடுத்து வைத்துவிடுவார்’ என்று கூற, அப்போது சுனிதா எழுந்து, இது பச்சை பொய்! இந்த வீட்டிலேயே கம்மியாக சாப்பிடுவது நான்தான் என்று சொல்கிறார்.

அப்போது, தர்ஷாவிடம் விஜய் சேதுபதி, நீங்கள் தான் பழிபோட்டீர்கள். அது சுத்தமாக இல்லைன்னு சொல்லிட்டாங்க, நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று கூறுவதுடன், இன்றைய மூன்றாவது புரோமோ முடிவுக்கு வருகிறது. இன்றைய 3 புரமோக்களும் விறுவிறுப்பாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'ஆனந்தம்'.. ஆன்மீக பயணத்தில் 'சீதாராமம்' நடிகை.. பக்திமயமான புகைப்படங்கள்..!

ஆனந்தம் என்ற தலைப்பில் ஆன்மீக பயணம் செய்த புகைப்படங்களை 'சீதாராமம்' நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த பக்தி மயமான புகைப்படங்கள்

அருண் விஜய்யின் அடுத்த படம்.. சூப்பர் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

நடிகர் அருண் விஜய் நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து, படக்குழுவினர் ஒரு சூப்பர் வீடியோவை வெளியிட்டுள்ளனர், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள்.. பில்லியன் கணக்கில் பார்வை நிமிடங்கள்.. பிக்பாஸ் தமிழ் 8 மாபெரும் வெற்றி..

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமான 5 மணி நேர துவக்க விழாவுடன் துவங்கியது. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய

பிரேக்கிங் பாயிண்டை தொட்டதுக்கு அப்புறம் யாராலும் அடிக்க முடியாது: 'லியோ' 8 நிமிட வீடியோ..!

தளபதி விஜய் நடித்த "லியோ" திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறும் நிலையில், இது குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்திருந்தார்

என்ன ஏதுன்னு கூப்பிட்டு கொஞ்சம் அன்பா விசாரிப்போமா? பிக்பாஸ் விஜய் சேதுபதி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சனி ஞாயிறு என்றாலே கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பதும்,