கேட்ட கேள்விக்கான பதிலை சொல்லுங்க.. தர்ஷா குப்தாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய விஜய் சேதுபதி எபிசோடு வழக்கத்தை விட சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் தர்ஷா குப்தாவை விஜய் சேதுபதி வறுத்தெடுக்கும் காட்சிகள் உள்ளன. ’இங்கே ஒரு குழாயடி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் முட்டை அவசியமா? என்று தர்ஷா குப்தாவிடம் கேட்க, அவர் ’எல்லாருக்கும் பங்கு வைக்கிறார்கள் என சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இடைமறித்த விஜய் சேதுபதி, உங்களுக்கு ஃபேவரான பதிலை சொல்லாதீர்கள், கேட்ட கேள்விக்கான பதிலை சொல்லுங்கள் என்று கூறுகிறார்.

உடனே, அன்ஷிதா ஆரம்பத்திலிருந்தே பாகுபாடு கொண்டிருந்தார், சுனிதாவுக்கு என தனியாக எடுத்து வைத்துவிடுவார்’ என்று கூற, அப்போது சுனிதா எழுந்து, இது பச்சை பொய்! இந்த வீட்டிலேயே கம்மியாக சாப்பிடுவது நான்தான் என்று சொல்கிறார்.

அப்போது, தர்ஷாவிடம் விஜய் சேதுபதி, நீங்கள் தான் பழிபோட்டீர்கள். அது சுத்தமாக இல்லைன்னு சொல்லிட்டாங்க, நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று கூறுவதுடன், இன்றைய மூன்றாவது புரோமோ முடிவுக்கு வருகிறது. இன்றைய 3 புரமோக்களும் விறுவிறுப்பாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.