ஜெயிப்பதெல்லாம் ஒரு விஷயமா? விளையாட்டு சுவாரஸ்யமா இருக்கணும்: வறுத்தெடுத்த விஜய்சேதுபதி..!

  • IndiaGlitz, [Saturday,October 26 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 20வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இன்றைய அடுத்த புரோமோவில் விஜய் சேதுபதி ஆண்கள் டீமை வறுத்தெடுக்கும் காட்சிகள் இருப்பதால், இன்றைய எபிசோடுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

கில்லர் காயின் டாஸ்க் என்று ஒன்று நடத்தினோம், அது சுவாரஸ்யமாக இருந்ததா? இல்லையா? என்று விஜய் சேதுபதி கேட்க, பெண்கள் டீமில் உள்ள ஒட்டுமொத்த போட்டியாளர்களும், சுவாரஸ்யமாக இல்லை, ரொம்ப பயமாக இருந்தது, ரசித்து பார்க்க முடியவில்லை என்றும், அவர்களது ஒரே மோட்டிவ் கோழியை அமுக்கிற மாதிரி அமுக்க வேண்டும் என்றும், கொஞ்சம் அன்ஃபேராக இருந்தது என்றும் குற்றம் சாட்டினர்.

ஆனால், ஆண்கள் டீமில் உள்ள சத்யா கூறிய போது, நாங்கள் ஜெயிக்கணும் அவ்வளவுதான் என்று கூறினார். உடனே விஜய்சேதுபதி இந்த கேமில் ஜெயிக்கிறதுக்கு என்ன இருக்கிறது? நான் வேண்டுமானால் உங்கள் எல்லோருக்கும் இப்போது அந்த காயினை கொடுத்து அனுப்பவா? விளையாடும் விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். பார்க்கிறவங்கள பதபதைக்க வைத்துள்ளீர்கள்; அதை நீங்கள் செய்யலாமா? என கேட்டு, ஆண்கள் டீமில் உள்ள ஒட்டுமொத்த போட்டியாளர்களை வறுத்தெடுத்தார். இதிலிருந்து, இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்திய ராணுவ வீரர்களுக்காக ஸ்பெஷல் காட்சி.. கண்கலங்க வைத்த 'அமரன்'..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

எனக்கு சாக்லேட், இனிப்புகள் பரிசாக கிடைத்தது: பாலாவின் 4வது திருமணம் குறித்து 3வது மனைவி..!

நடிகர் பாலா சமீபத்தில் தனது உறவினர் பெண்ணை நான்காவது திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது மூன்றாவது மனைவி டாக்டர் எலிசபெத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில்

நமக்கான சிம்மாசனத்தை நாம தான் சுமக்கணும்: பஞ்ச் டயலாக் பேசிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் என்பதையும் குறிப்பாக போட்டியாளர்களிடம் அவர் இயல்பாக அதே நேரத்தில் நக்கலாகவும் கருத்தாகவும்

ஆவலுடன் எதிர்பார்த்த 'ஸ்பைடர்மேன் 4'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிக்கும் 'ஸ்பைடர் மேன் 4' 2026 ஆம் ஆண்டு ஜூலை 24, அன்று திரையரங்குகளில் வெளி வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.. இரட்டை அர்த்தம் பாடல் என்ற விமர்சனத்திற்கு இயக்குனர் விளக்கம்..!

சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவான "ஜாலியோ ஜிம்கானா" என்ற திரைப்படத்தின் பாடல் நேற்று வெளியான நிலையில், இந்த பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.