விஜய்சேதுபதியுடன் இணையும் இளம் ஹீரோ

  • IndiaGlitz, [Monday,February 06 2017]

கடந்த ஆண்டு அதிக படங்களை வெளியிட்டவர் என்ற பெருமை பெற்ற விஜய்சேதுபதி, இந்த ஆண்டும் அவர் ஒப்பந்தமாகிவரும் எண்ணிக்கையை பார்க்கும்போது அதிக படங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்சேதுபதி நடிப்பில் 'புரியாத புதிர்', கவண், விக்ரம் வேதா, கருப்பன், 96, போன்ற படங்கள் தயாராகி வரும் நிலையில் தற்போது இளம் ஹீரோ ஒருவருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல நடிகர் கார்த்திக் மகனும், வளர்ந்து வரும் ஹீரோவுமான கவுதம் கார்த்திக் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் படமான இந்த படத்தில் தற்போது விஜய்சேதுபதி இணைந்துள்ளார். கவுதம் கார்த்திக் கல்லூரி மாணவனாகவும், விஜய்சேதுபதி பழங்குடி இனத்தலைவராகவும் இதில் நடிக்கவுள்ளனர். ஒரு மாணவனுக்கும், பழங்குடி இனத்தலைவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனைதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இன்று முதல் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் இயக்குனர் ஆறுமுக குமார் கூறியுள்ளார்.

More News

மீண்டும் மாணவர்களுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்

உலகையே திரும்பி பார்க்க வைத்த சமீபத்திய நிகழ்ச்சி மெரீனாவில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டம். இந்த போராட்டத்தின் பயனாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டத்தை இயற்றின...

காதலர் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான். 'அழகியே' அடுத்து 'வான்'

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே' சிங்கிள் பாடல் கடந்த 2ஆம் தேதி வெளிவந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

தமிழகத்துக்குப் புது முதல்வர். ஓபிஎஸ் பதவி விலகல்

முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணமடைந்தபின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகப் போகிறார் என்றும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி;கே.சசிகலா தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

தீர்ப்பு எப்படி இருக்கும். கடைசி நிமிடத்தில் ஆச்சார்யா கருத்து

ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று இந்த வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதாடிய ஆச்சார்யா கடைசி நிமிடத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்...

கமல்ஹாசனை அடுத்து நந்தினிக்காக குரல் கொடுத்த திரையுலக பிரமுகர்கள்

சமீபத்தில் அரியலூர் அருகே நந்தினி என்ற 17 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது...