காந்தி பிறந்த நாளில் 'காந்தி டாக்ஸ்' வீடியோ..விஜய் சேதுபதி ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியின் பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் "காந்தி டாக்ஸ்" என்ற படத்தின் வீடியோ வெளியாகி, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைத்ரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார்.
இந்த படம் 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில், காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சுமார் இரண்டு நிமிட வீடியோ ஒன்று வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் ஹைத்ரி ஆகியோர் நடித்த காட்சிகள் அடங்கியுள்ளன. இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The voice that matters today, the voice that will echo soon in every corner! Gandhi Jayanthi wishes to all#GandhiTalks coming soon.@arrahman @thearvindswami @aditiraohydari @SIDDHARTH23OCT @kishorbelekar #UmeshKrBansal @ZeeStudios_ #Kyoorius @moviemillent @zeestudiossouth pic.twitter.com/o29NZL1zAE
— VijaySethupathi (@VijaySethuOffl) October 2, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments