காந்தி பிறந்த நாளில் 'காந்தி டாக்ஸ்' வீடியோ..விஜய் சேதுபதி ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியின் பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் காந்தி டாக்ஸ் என்ற படத்தின் வீடியோ வெளியாகி, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைத்ரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார்.

இந்த படம் 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில், காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சுமார் இரண்டு நிமிட வீடியோ ஒன்று வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் ஹைத்ரி ஆகியோர் நடித்த காட்சிகள் அடங்கியுள்ளன. இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

துணை முதல்வர் உதயநிதிக்கு  திரையுலகம் சார்பில் பாராட்டு விழா: ஆர்கே செல்வமணி

நடிகராக இருந்து துணை முதல்வர் ஆகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைத்தால் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

ரஜினியின் உடல்நிலை.. மருத்துவர்கள் கூறிய லேட்டஸ்ட் தகவல்.. 'கூலி' படப்பிடிப்பு தாமதமாகுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட  DMY கிரியேஷன் நிறுவனர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி..!

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும்,  DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

ரஜினியின் உடல்நிலை: லதா ரஜினியிடம் போனில் பேசிய பிரதமர் மோடி..!

சூப்பர் ஸ்டார் ரஜினி உடல்நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் பிரதமர் மோடி விசாரித்ததாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

'கோட்' படத்தில் பட்டையை கிளப்பிய டான்ஸ் மாஸ்டர்.. 'தளபதி 69ல் இணைகிறாரா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சேகர் மாஸ்டர், தளபதி 69 படத்திலும் ஒரு பாடலுக்காக நடன இயக்குனராக பணியாற்ற