இன்று மாலை விஜய்சேதுபதியின் அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,March 03 2020]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நாயகன், சிறப்பு தோற்றம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த பிஸியான நேரத்திலும் அவர் தனது நண்பர்களின் படங்களின் புரமோஷனுக்கு உதவி செய்துவருகிறார்

ஏற்கனவே சமீபத்தில் வெளிவந்த 'ஓ மை கடவுளே' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்த விஜய்சேதுபதி அவ்வப்போது தனக்கு நெருக்கமானவர்கள் தயாரித்து இயக்கி வரும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் வருகிறார்

அந்த வகையில் தற்போது இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் நடிகை ரெஜினா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படத்தின் டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்

ரெஜினாவுடன் அக்சரா கவுடா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவும் சாபு ஜோசப் படத்தொகுப்பு பணியும் செய்ய உள்ளனர். ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் டீசர் டிரைலர் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

போகாதே... என் தலைவா... போகாதே... பிரதமர் மோடி அறிவிப்பால் கதறும் ஆதரவாளர்கள்

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து விலகுவதாகத் தனது ட்விட்டர்

அருவா டைட்டிலை வேண்டாம் என்ற பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் ஹரி இயக்குவதாக இருக்கும் திரைப்படத்திற்கு 'அருவா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறன்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

'அருவா' படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடமா? பரபரப்பு தகவல் 

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் படத்தின் டைட்டில் 'அருவா' என்று கடந்த ஞாயிறன்று அதிகாரப்பூர்வமாக வெளி வந்தது தெரிந்ததே. டி இமான் இசையில் ஞானவேல்ராஜா தயாரிக்கும்

'இந்தியன் 2' விபத்து: இன்று கமல் ஆஜர்

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது திடீரென ஏற்பட்ட விபத்தால் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

பாண்டவர் அணி உடைகிறதா? நாசர் மனைவி டுவிட்டால் பரபரப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சங்கரதாஸ் அணி என்ற இரு அணிகள் மோதியது என்பதும் இந்த தேர்தல் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில்