நான் தட்டுனா அவருக்கு கேட்கும்: எஸ்பி ஜனநாதன் குறித்து கோபமாக கூறிய விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Saturday,March 13 2021]

நான் தட்டினால் அவருக்குக் கேட்கும், அவர் என் டைரக்டர் என விஜய்சேதுபதி, இயக்குனர் எஸ்பி ஜனநாதன் குறித்து கோபமாக கூறியதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது

எஸ்பி ஜனநாதன் அலுவலகத்தில் வேலை செய்யும் ’காதல்’ படத்தில் நாயகி சந்தியாவுக்கு தோழியாக நடித்த சரண்யா அவரது உடல்நிலை குறித்து கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இரண்டு நாட்களுக்கு முன் இயக்குனர் எஸ்பி ஜனநாதன், மதியம் சாப்பிட்ட பின், திடீரென மயக்கம் வருகிறது என உதவி இயக்குனருக்கு போன் செய்து கூறியிருக்கிறார். ஆனால் உதவி இயக்குனர் வருவதற்குள் வாந்தி எடுத்து நினைவிழந்து மயங்கி விழுந்துள்ளார். உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நினைவு தப்பி விட்டது. அவரை அனைவரும் தட்டிப் பார்த்தும் எந்த விதமான ரெஸ்பான்ஸ்ஸும் இல்லை

எஸ்பி ஜனநாதன் உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட உடனே விஜய் சேதுபதி இரவு 12 மணிக்கு நேரில் வந்து பார்த்தார். அப்போது அவரை வேகமாக தட்டி, எழுந்திரியுங்கள் என்று விஜய்சேதுபதி தட்டினார். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை. அருகிலிருந்தவர்கள் விஜய்சேதுபதியிடம், ‘ஏன் இவ்வளவு வேகமாக தட்டுகிறீர்கள்’ என கேட்டதற்கு விஜய் சேதுபதி கோபத்துடன் ’அவர் என் டைரக்டர், நான் தட்டினால் அவருக்குக் கேட்கும், கண்டிப்பாக எழுந்து விடுவார்’ என்று கூறினார். ஆனால் இயக்குனர் எழுந்திருக்கவே இல்லை. அதன் பிறகு ’வாழ்க்கை இவ்வளவு தான்’ என விஜய் சேதுபதி அழுதுகொண்டே மருத்துவமனையிலிருந்து சென்றார்’ என்று நடிகை சரண்யா வருத்தத்துடன் கூறியுள்ளார்