close
Choose your channels

விஜய்சேதுபதி - வடிவேலு படத்தை இயக்குவது இந்த இயக்குனரா?

Thursday, October 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி மற்றும் வடிவேலு ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் கசிந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதி ஹீரோ, வில்லன் மற்றும் சிறப்புத் தோற்றம் என அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடித்து வருகிறார். அவர் தற்போது வெற்றிமாறனின் ‘விடுதலை’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த வடிவேலு தற்போது ’மாமல்லன்’ ’நாய் சேகர் ரிட்டர்ன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் முதல் முறையாக விஜய்சேதுபதியுடன் வடிவேலு இணைய உள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஜய் சேதுபதி - வடிவேலு இணையும் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருப்பதாகவும் மிஸ்கின் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தை இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கி இருப்பதாக தெரிகிறது . இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.