விஜய்சேதுபதி-த்ரிஷா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

  • IndiaGlitz, [Monday,May 15 2017]

ஜெயம் ரவியின் 'ரோமியோ ஜூலியட், விஷாலின் 'கத்திச்சண்டை' விக்ரம் பிரபுவின் 'வீரசிவாஜி ஆகிய படங்களை அடுத்து தற்போது விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இதே நிறுவனம் தயாரிக்கவுள்ள இன்னொரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். '96' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் முதன்முதலாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாகிறார் த்ரிஷா

இந்த படத்தை பிரேம்குமார் என்பவர் இயக்கவுள்ளார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் என்பதும் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் இசையும், சண்முகசுந்தரம் ஒளிப்பதிவும், கோவிந்தராஜ் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர்.

முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, திரிஷா இருவரது சிறு வயது கதாபாத்திற்கான நடிகர், நடிககை தேர்வு நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் கூறியுள்ளார்.

More News

விஷால் விஷ்ணுவை 'கதாநாயகன்' ஆக்கிய தனுஷ்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளளயதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷால் விஷ்ணு...

உதயநிதியின் 'சரவணன் இருக்க பயமேன்' சென்னை வசூல் எப்படி?

இயக்குனர் எழில் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் 'சரவணன் இருக்க பயமேன்'. இருவருமே 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மனிதன் என சூப்பர் ஹிட் படங்களை தனித்தனியாக கொடுத்த நிலையில் இருவரும் இணைந்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது...

மூன்றாவது வாரத்திலும் வசூலில் சாதனை புரிந்த மகிழ்மதி மன்னன்

உலகம் முழுவதும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றது மட்டுமின்றி, வசூலிலும் சாதனை புரிந்த எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான படைப்பான 'பாகுபலி 2' திரைப்படம் மூன்று வாரங்கள் ஆகியும் திருப்திகரமான வசூலை இன்னும் கொடுத்து வருகிறது...

ரஜினிக்கு வந்த மிரட்டல் கடிதத்திற்கு தனுஷ் அதிரடி பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ள 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை மும்பை டான் ஹாஜி மஸ்தான் கதை என்று ஊடகங்களில் செய்திகள் கசிந்தது. இதையறிந்த ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சமீபத்தில் ரஜினிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கடித&#

உலக சாதனை செய்தது எனது முதல் படம். கமல் மகள் பெருமிதம்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த டீசர் வெளியான மூன்று நாட்களில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று உலக சாதனை செய்துள்ளது...