கோடை விடுமுறையை குறிவைக்கும் விஜய்சேதுபதியின் படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு அது இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த 2016ஆம் ஆண்டில் சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க ஆகிய படங்களிலும், 2017ஆம் ஆண்டில் கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர், கதாநாயகன், கருப்பன், ஆகிய படங்களிலும் நடித்த விஜய்சேதுபதி தற்போது அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் பெரும்பாலான படங்கள் இந்த ஆண்டே ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது
இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ள த்ரிஷாவுடன் விஜய்சேதுபதி நடித்துவரும் '96' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்தவுடன் வெகுவிரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் கோடைவிடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பிரேம்குமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் என்பவர் இசையமைத்துவ் அருகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments