மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி-தமன்னா: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Sunday,June 27 2021]

விஜய்சேதுபதி மற்றும் தமன்னா ஆகிய இருவரும் சீனு ராமசாமி இயக்கிய ’தர்மதுரை’ என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்கள் என்பதும் இருவருமே டாக்டர் கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய்சேதுபதி மற்றும் தமன்னா இணைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சன் டிவியில் ’மாஸ்டர் செஃப்’ என்ற பிரமாண்டமான சமையல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது., இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இது குறித்த ட்ரெய்லர் ஒன்றும் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இதே நிகழ்ச்சி தெலுங்கிலும் ஜெமினி தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது தமன்னா, விஜய்சேதுபதியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் தெலுங்கு புரோமோ சூட்டிங்கில் கலந்து கொண்டபோது விஜய் சேதுபதியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது.