close
Choose your channels

ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி.. ஆனால் ஹீரோ யார் தெரியுமா?

Tuesday, July 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் நிலையில் அந்த படத்தில் பிரபலம் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரை உலகில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் திரையுலக பின்புலம் இல்லாமல் தங்களுடைய நடிப்பு திறமையை வைத்து முன்னேறியவர்கள் என்பதும் இருவரும் தற்போது தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப் போவதாகவும் அந்த படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் மட்டுமின்றி கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சூரி நடிக்க இருப்பதாகவும் விரைவில் கௌதம் மேனன் மற்றும் சூரி சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’விடுதலை’ மற்றும் ’கருடன்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களில் சூரி ஹீரோவாக நடித்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்த இன்னொரு திரைப்படமான ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால் சூரிக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்த பெருமை உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment