முதல்முறையாக இணையும் விஜய்சேதுபதி-சிம்பு! அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 04 2020]

கோலிவுட் திரையுலகில் விஜய்சேதுபதி மற்றும் சிம்பு ஆகிய இருவரும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது இருவரும் இணையும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

விஜய்சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பிந்துமாதவி நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே.

தேர்ட் ஐ என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இந்த படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த டைட்டிலை விஜய் சேதுபதி மற்றும் சிம்பு ஆகிய இருவரும் இணைந்து ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெளியாகும் இந்த டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.