சூப்பர் டீலக்ஸ் படத்தில் சூப்பர் கேரக்டரில் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

முதல்படமான 'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவருடைய அடுத்த படமான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள சூப்பர் கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய்சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடித்துள்ளதாகவும், மிஷ்கின் இந்த படத்தில் ஒரு பாதிரியராக நடித்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படம் ஒரு டார்க் காமெடி படம் என்றும் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகள் அடங்கிய படம் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஆங்காங்கே டுவிஸ்டுகள், திருப்புமுனைகளுடன் கூடிய இந்த படம் இந்த ஆண்டின் சி'றந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முதல்முதலாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், பகத்பாசில் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி கோலிவுட்டின் ஸ்டிரைக் முடிந்தவுடன் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

More News

குதிரைக்கு தெரியுமா காவிரி பிரச்சனை? மெரினாவில் ஏமாந்த போலீசார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வந்த போதிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் ஒரு மெரினா போராட்டம் நடத்த வேண்டும் என்று முகநூல் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.

காவிரிக்காக போராடி மெரீனாவில் கைதானாவர்கள் யார்? போலீசார் தீவிர விசாரணை

இன்று மாலை சுமார் 30 பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து திடீரென காவிரி குறித்த பதாகைகளை கையில் ஏந்தி மெரினாவில் போராட்டத்தை தொடங்கினர்.

சென்னையில் சிஎஸ்கே போட்டிகான டிக்கெட்டுக்கள் எப்போது கிடைக்கும்

ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இறங்கவுள்ளதால்

கமல்ஹாசனை முந்தினார் சரத்குமார்

தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக போராடி வருகின்றனர்.

ஐபிஎல் 2018: ப்ரித்தி ஜிந்தா கனவை நிறைவேற்றுவாரா அஸ்வின்?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு நெருங்கிவிட்டதை அடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்ளும் எட்டு அணியும் போட்டியை எதிர்நோக்க தயாராகி வருகின்றது.