மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, சாய் பல்லவி, ஏ.ஆர்.ரஹ்மான்? மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,November 18 2023]

தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஏ =ஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் ராம்சரண் தேஜா. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை புச்சி பாபு இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தின் நாயகியாக நடிக்க நடிகை சாய் பல்லவி சம்மதித்து உள்ளதாகவும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கிராமத்து பின்னணியில் விளையாட்டை மையமாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

பான் இந்திய திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.