அரசியல் என்பது விசுவாசம் இல்ல, அது ஒரு கணக்கு: 'துக்ளக் தர்பார்' டிரைலர்

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி, பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

இந்த படம் ஒரு அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்பதும் அரசியல்வாதி பார்த்திபனிடம் உதவியாளராக இருக்கும் விஜய் சேதுபதி, பார்த்திபனை பின்னுக்கு தள்ளிவிட்டு எப்படி அரசியலில் முன்னேறுகிறார் என்பதுதான் கதை என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

அரசியல் படம் என்பதால் இந்த படத்தில் வசனம் அனல் பறக்கிறது என்பதும் குறிப்பாக ‘இன்னும் முன்னூறு வருஷம் ஆனாலும் இங்கே எதுவுமே மாறாது, மாறவும் விடமாட்டாங்க என்ற வசனமும், அரசியல் என்பது விசுவாசம் இல்லை, அது ஒரு கணக்கு என்ற வசனமும் ரசிக்கும் வகையில் உள்ளது.

மொத்தத்தில் ’துக்ளக் தர்பார்’ திரைப்படம் விஜய் சேதுபதியின் மற்றொரு வெற்றிபெற பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'காதல்' பட கரட்டாண்டிக்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

பரத், சந்தியா நடிப்பில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான 'காதல்' திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இன்ஸ்டாகிராம் வந்த ஜோதிகா: முதல் போஸ்ட்டே அட்டகாசம்!

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி உள்ள நிலையில் முதல் போஸ்ட்டே அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் பயங்கர விபத்து.....! திமுக எம்.எல்.ஏ. மகனுடன் 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.....!

கர்நாடக பகுதியில் அதிவேகமாக கார் சென்றுகொண்டிருக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்ததில்

என் தாயகமே உனக்கு ஏன் வேதனை? ஆப்கன் வலியை வரிகளாய் வடித்துவிட்ட பாடகர்!

ஆப்கானிஸ்தானில் இன்னும் ஒரு சில தினங்களில் தாலிபான்கள் ஆட்சி அமைக்கவுள்ளனர்.

பாராலிம்பிக் போட்டியில் இன்று பதக்க வேட்டை நடத்திய இந்திய வீரர்கள்!

மாற்றுத் திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.