போனோடும் நெட்டோடும் நல்லா இரும்மா.. விஜய்சேதுபதியின் 'டிஎஸ்பி' சிங்கிள் பாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு ’டிஎஸ்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை நீண்ட இடைவெளிக்கு பின்னர் உதித் நாராயணன் பாடியதாகவும் அவருடன் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ் பாடிய உள்ளதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்
இந்த நிலையில் இந்த பாடல் சற்றுமுன் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. ‘நல்லா இரும்மா’ என்று தொடங்கும் இந்த பாடலை விஜய் முத்துப்பாண்டி எழுதியுள்ளார். முதல் முறை கேட்கும்போதே இந்த பாடல் ஜாலியாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ் ,பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்பட பலரது நடிப்பில் உருவாக்கிய இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:
நல்லா இரும்மா, ரொம்ப நல்லா இரும்மா
பூவோடும் பொட்டோடும் நல்லா இரும்மா
நல்லா இரும்மா, ரொம்ப நல்லா இரும்மா
போனோடும் நெட்டோடும் நல்லா இரும்மா
தவிக்க விட்டு போனாலும் தனியா விட்டு போனாலும்
கழட்டிவிட்டு போனாலும், கை கழுவி விட்டு போனாலும்
ஃபிரண்டு கூட போனாலும், நீ பெஸ்ட்டி கூட போனாலும்
ஃபாரினுக்கு போனாலும் நீ விண்வெளிக்கு போனாலும்
நல்லா இரும்மா, ரொம்ப நல்லா இரும்மா
பூவோடும் பொட்டோடும் நல்லா இரும்மா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com