விஜய் சேதுபதி - பாண்டிராஜ் படத்தின் நாயகி இந்த பிரபலமா? அப்ப சம்பவம் இருக்கு..!

  • IndiaGlitz, [Tuesday,July 02 2024]

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளதை அடுத்து இவர் உறுதி செய்யப்பட்டால் இந்த படத்தில் ஒரு சிறப்பான சம்பவம் இருக்கு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது ஒரு பெரிய பட்ஜெட் படம் என்றும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி விஜய் சேதுபதி ஜோடியாக இந்த படத்தில் நித்யா மேனன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் உடன் நித்யா மேனன் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள ’காதலுக்கு நேரமில்லை’ திரைப்படமும் விரைவில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதி ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.