இளம் நடிகருக்காக இணைந்த விஜய்சேதுபதி-கீர்த்தி சுரேஷ்!

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்திற்காக விஜய் சேதுபதி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் ஏற்கனவே சிம்புவுடன் ’பத்து தல’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’செல்லப்பிள்ளை’ என வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் அருண் சந்திரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ’செல்லப்பிள்ளை’ படத்தின் மோஷன் டீசர் நாளை காலை 11.05 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த மோஷன் டீசரை விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி ஆகிய மூவரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட வெளியிட ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கௌதம் கார்த்திக் படத்தின் மோஷன் டீசரை வெளியிட ஒப்புக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர்களுக்கு கௌதம் கார்த்திக்கின் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.,