விஜய்சேதுபதி-காத்ரினா கைஃப் படம் குறித்த மாஸ் தகவல்!

  • IndiaGlitz, [Saturday,December 25 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பாலிவுட் பிரபல நடிகை காத்ரின்னா கைஃப் உடன் ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதும் இந்த படத்திற்கு ’மேரி கிறிஸ்துமஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கிறிஸ்துமஸ் தினத்தில் மும்பையில் ஆரம்பமாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ஸ்ரீ ராகவன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தேசிய விருது பெற்ற சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படமான ’அந்தாதூன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்களே இல்லாமல் வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் உருவாகும் இந்த படம் மும்பை மற்றும் புனே பகுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தில் இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டர் விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.