விஜய்சேதுபதி ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நாயகி? 

  • IndiaGlitz, [Monday,January 11 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் கதாநாயகன், வில்லன், சிறப்பு தோற்றம் என மாஸ் காட்டி வருவது தெரிந்ததே. தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு படங்களிலும் அவர் தற்போது நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் சந்தோஷ் சிவன் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் ’அந்தாதூன்’ இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் விஜய் சேதுபதி ஜோடியாக இந்த படத்தில் நடிக்க காத்ரீனா கைப் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் திரையுலகில் நுழைந்து உள்ளதால் அவர் அகில இந்திய நாயகனாக மாறி விட்டதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது