விஜய்சேதுபதி - கெளதம் மேனன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ’புரியாத புதிர்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவரது இயக்கத்தில் ’மைக்கேல்’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தீப் கிஷான் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, கௌதம் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்ற நிலையில் இந்த படம் தற்போது பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#MICHAEL Grand Release in Theatres on Feb 3rd, 2023
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 3, 2023
Sundeep Kishan - Vijay Sethupathi - GVM - Lokesh Kanagaraj
Tamil Nadu Theatrical Release by @CineShanmuga#MichaelfromFEB3rd 👊🏾 pic.twitter.com/bWfapmHeWG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com