விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் 'பாட்ஷா' கனெக்சன்?

  • IndiaGlitz, [Wednesday,December 26 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த '96' மற்றும் 'சீதக்காதி' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் ஆட்டோ டிரைவர்கள் அணியும் காக்கி உடையுடன் கூடிய விஜய்சேதுபதியின் செல்பி ஸ்டில் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆட்டோ டிரைவர் வேடம் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது 'பாட்ஷா' படம் என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் 'ரஜினியுடன் 'பேட்ட' படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய்சேதுபதி, அடுத்ததாக ரஜினி நடித்த ஆட்டோ டிரைவர் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது