ஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Friday,April 27 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று நேற்று வெளிவந்த செய்தியை பார்த்தோம். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படினும் இந்த தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை

இந்த நிலையில் ரஜினியுடன் மட்டுமின்றி மேலும் இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் விஜய்சேதுபதி ஏற்கனவே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஆகியோர்கள். சிரஞ்சீவி மற்றும் அமிதாப்பச்சனுடன் விஜய்சேதுபதி, 'சயீரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இதன்மூலம் ஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து வரும் நடிகர் என்ற பெருமையை விஜய்சேதுபதி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெற்றி பெற்ற இரவில் தோனி, ரெய்னா மகள்கள் செய்தது என்ன தெரியுமா?

நேற்று முன் தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் தோனி மற்றும் ராயுடு அதிரடியில் சென்னை அணி, 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.

திருமணம் எப்போது? ஸ்ருதிஹாசன் பதில்

நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நடிகர் மைக்லேல் கார்சல் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரையே ஸ்ருதிஹாசன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்டது.

படுக்கைக்கு அழைக்கும் வழக்கும் குறித்து நடிகை அடா சர்மா கூறியது என்ன?

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் குறித்து பல நடிகைகள் தைரியமாக கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் 'சார்லி சாப்ளின் 2' படத்தின் நாயகி அடாசர்மா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றும் வழக்கின் தீர்ப்பு விவரம்

தமிழக சட்டசபையில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடுத்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் அளிக்கப்பட்டது

ஓபிஎஸ் உள்பட11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை கட்சித்தாவல் சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடுத்த வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது.