விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது இந்த ஒரு படம் மட்டும் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி ஒரு சில படங்களில் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே அவர் தற்போது வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் மற்ற தகவல்கள் உறுதி செய்யப்படாதவை என்றும் அவரது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ அல்லு அர்ஜுன் நடித்து வரும் ’புஷ்பா 2’ உள்பட ஒருசில படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த ஒப்பந்தத்தில் விஜய்சேதுபதி கையெழுத்திட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படத்தில் மட்டுமே விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் மற்றபடி தெலுங்கு படங்கள் உள்பட எந்த ஒரு படத்திலும் அவர் இதுவரை நெகட்டிவ் ரோல்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ‘புஷ்பா 2’ படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட தகவல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.