தேர்தல் ஆணையத்திற்கு உதவி செய்த விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Tuesday,March 12 2019]

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளம்பரம் படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதில் விஜய்சேதுபதி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கியுள்ளார். இந்த விளம்பர படத்தில் விஜய்சேதுபதி கூறியதாவது:

நம்மை ஆளப்போவது யார்? யாரிடம் ஆட்சியை கொடுக்க வேண்டும்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது? இதுவரை அவர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள்? இவற்றை அலசி ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். ஓட்டு போடும் முன் தெளிவாக சிந்தித்து நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள், முக்கியமாக ஓட்டு போடாமல் இருந்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார். இதே விளம்பரப்படத்தில் நடிகர் விவேக்கும் ஓட்டு போடுவதன் அவசியத்தை கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி தோன்றும் இந்த தேர்தல் ஆணையத்தின் விளம்பர படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

More News

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணையும் சூர்யா-மாதவன்

'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் சூர்யாவும் மாதவனும் முதல்முறையாக இணைந்து நடித்தனர். அதன்பின் கமல்ஹாசன், மாதவன் நடித்த 'மன்மதன் அன்பு' படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

நோபல் பரிசு பெற்றவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பாலிவுட்-ஹாலிவுட் கலைஞர்கள்

அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படம் எடுக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

விஜய்யின் 'தெறி' தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகர்!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தெறி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே. விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன்

கென்னடி கிளப்: கிளைமாக்ஸ் காட்சிக்காக நிஜ கபடி போட்டி நடத்திய படக்குழு

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா நடித்து வரும் 'கென்னடி கிளப்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ரூ.2 கோடி செலவில் நிஜ கபடி போட்டி தொடர் ஒன்றை படக்குழு நடத்திய தகவல் தற்போது வெளிவந்தூள்ளது

பொள்ளாச்சி விவகாரம்: 4 வீடியோக்கள் மட்டும் கிடைத்ததாக காவல்துறை தகவல்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழகம் முழுவதும் கொளுந்துவிட்டு எரியும் நிலையில் இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் யாரும் இல்லை என்றும்,