2 பாகங்களில் முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு படம்.. விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்..

  • IndiaGlitz, [Thursday,August 03 2023]

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தில் சித்தராமைய்யா கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் உள்பட இந்திய மொழிகளில் பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் சித்தராமைய்யா மீண்டும் முதலமைச்சர் ஆனார்.

இந்த நிலையில் சித்தராமைய்யா வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தை சத்ய ரத்தினம் என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சித்தராமைய்யா கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் முதல் பாகத்தில் அவருடைய குழந்தை பருவம், இளமை பருவம் ஆகிய காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் முதல் பாகத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவது பாதியில் சித்தராமைய்யா அரசியல் வாழ்க்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருக்கும் என்பதால் இரண்டாவது பாதியில் முழுக்க முழுக்க விஜய் சேதுபதி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

'நாளைக்கு நான் ஊருக்கு போகணும்'.. பிரபுதேவாவின் 60வது படம் 'வுல்ஃப்'  டீசர்..

பிரபுதேவா நடித்து வரும் 60வது திரைப்படமான 'வுல்ஃப்'  படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

பாஜகவில் இணைந்தார் விஜய்யின் 'வாரிசு' பட நடிகை.. தேர்தலில் போட்டியா?

விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைந்துள்ளார்.  

முயற்சியை கைவிடாதீங்க… 35 முறை தோல்வியை சந்தித்த இளைஞர் ஐஏஎஸ் ஆன சுவாரசியம்!!

போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது என்பது அவ்வளவு எளிதான கரியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்

'மாமன்னன்' ரத்னவேல் பாண்டியன் மனைவியின் ட்விட்.. என்ன செய்ய காத்திருக்கின்றனர் நெட்டிசன்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' திரைப்படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி

48 வயதில் வெறித்தனமாக வொர்க் அவுட்? பிரபல நடிகையைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து தற்போது சினிமாவை விட்டே விலகி இருக்கும் நடிகை ஒருவர்