புரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி.. ஜோடியாகும் நித்யா மேனன்.. இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,August 20 2024]

நடிகர் விஜய் சேதுபதி ஒரு திரைப்படத்தில் புரோட்டா மாஸ்டராக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக தேசிய விருது வாங்கிய நித்யா மேனன் இணைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி - நித்யா மேனன் ஜோடி ஏற்கனவே மலையாள படம் ஒன்றில் இணைந்து நடித்திருந்தாலும் தமிழில் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கும் இந்த புதிய படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டர் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் சில தினங்கள் புரோட்டா மாஸ்டர் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க இருப்பதாகவும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

 

More News

கேப்டன் வீட்டிற்கு திடீர் விசிட் செய்த தளபதி விஜய்.. ஏஐ காட்சிகள் குறித்து ஆலோசனையா?

தளபதி விஜய் நேற்று மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ZEE5 இன் மலையாள ஆந்தாலஜி தொகுப்பு  'மனோரதங்கள்' வெளியீட்டு விழா.. மோகன்லால் பங்கேற்பு..!

ZEE5 இன் 'மனோரதங்கள்,' மலையாள சினிமாவின் சிறந்த திறமைகளை முன்னிலைப்படுத்தும் ஒன்பது வசீகரிக்கும் கதைகளுடன் M.T வாசுதேவன் நாயரின் கற்பனை உலகத்துக்கான பயணமாக அமைந்துள்ளது.

அடுத்த ஆக்சன் படம்.. தயாரிப்பாளர், இயக்குனர் பெயரை அறிவித்த சூரி..!

நடிகர் சூரி தனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பெயரை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை பிரியங்கா மோகனுக்கு பட்டம் வழங்கிய நானி.. என்ன பட்டம் தெரியுமா?

நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த 'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின்

சீரியல் நடிகைக்கு 2வது திருமணம்.. கேரள தொழிலதிபரை கரம் பிடித்தார்..!

தமிழ் டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் நடித்துள்ள நடிகை, கேரள தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.