விஜய் சேதுபதி இல்லாத அவருடைய படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ.. இணையத்தில் வைரல்..!
- IndiaGlitz, [Tuesday,December 10 2024]
விஜய் சேதுபதி நடித்த அடுத்த படத்தின் நாயகியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, அது குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் விஜய் சேதுபதி இல்லை என்றாலும், நாயகியின் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதையடுத்து, அவருடைய 51வது படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த படத்தின் டைட்டில் ’ஏஸ்’ என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த படத்தின் நாயகியாக நடிக்கும் ருக்மணி வசந்த் நடித்து வரும் நிலையில், அவருடைய பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, அவருடைய கேரக்டர் ருக்கு என்ற காட்சிகள் கொண்ட கிளிம்ப்ஸ் வீடியோ சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, முத்துக்குமார், ராஜ்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கி தயாரித்து உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே. ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கரன் ரவாத் ஒளிப்பதிவில், கோவிந்தராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
நடிகை ருக்மணி வசந்த் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Happy birthday to the enchanting @rukminitweets ! 🌹✨ Team #Ace Wishing you a day filled with love, laughter, and dreams as beautiful as you are. ❤️🌟
— Think Music (@thinkmusicindia) December 10, 2024
Introducing #RukminiVasanth as #Rukku#MakkalSelvan #VijaySethupathi@VijaySethuOffl @7CsPvtPte @Aaru_Dir @justin_tunes… pic.twitter.com/7WLnjELXlf