விஜய் சேதுபதியின் 50வது படத்தின் ரிலீஸ் தேதி.. இயக்குனரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ’மகாராஜா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தற்போது அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் அஜனீஸ் லோக்நாத் இசையில் உருவான திரைப்படம் ’மகாராஜா’. இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் தனது சமூக வலைத்தளத்தில் ஜூன் 14ஆம் தேதி ’மகாராஜா’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் அடுத்தடுத்து புரமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
#Maharaja
— Nithilan Saminathan (@Dir_Nithilan) June 5, 2024
From June 14th
@VijaySethuOffl #VJS50 pic.twitter.com/zASbuIUjxy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com