50வது படத்தின் மாஸ் போஸ்டர்.. விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு 50 வது படம் என்பது முக்கியத்துவமாக கருதப்படுகிறது. அஜித், விஜய் போன்ற பிரபலங்கள் 50வது படம் என்ற மைல்கல்லை எட்டிவிட்ட நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி தற்போது 50வது படத்தில் நடித்து வருகிறார்.
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மகாராஜா’ என்ற திரைப்படம் தான் விஜய் சேதுபதியின் 50வது படம்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் ’மகாராஜா’ படத்தின் பொங்கல் சிறப்பு போஸ்டர் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fierce & extremely powerful #Maharaja Special Second Look Poster 👑
— Passion Studios (@PassionStudios_) January 16, 2024
Wishing our dearest Makkal Selvan @VijaySethuOffl a very happy birthday 🎉
Written & directed by @Dir_Nithilan#VJS50 #HappyBirthdayVijaySethupathi #HBDVijaySethupathi pic.twitter.com/CfpFX5tsCT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com