50வது படத்தின் மாஸ் போஸ்டர்.. விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து..!

  • IndiaGlitz, [Tuesday,January 16 2024]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு 50 வது படம் என்பது முக்கியத்துவமாக கருதப்படுகிறது. அஜித், விஜய் போன்ற பிரபலங்கள் 50வது படம் என்ற மைல்கல்லை எட்டிவிட்ட நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி தற்போது 50வது படத்தில் நடித்து வருகிறார்.
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மகாராஜா’ என்ற திரைப்படம் தான் விஜய் சேதுபதியின் 50வது படம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் ’மகாராஜா’ படத்தின் பொங்கல் சிறப்பு போஸ்டர் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

'அயலான்' படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 12ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான

பணம் கொடுத்து டைட்டில் வாங்கினாரா அர்ச்சனா? மாயாவின் சர்ச்சை பதிவு..!

 'பணம் கொடுத்து டைட்டில் பட்டத்தை நீங்கள் பெறலாம், ஆனால் என்னை போல் மக்களின் அன்பை பணம் கொடுத்து வாங்க முடியாது' என்று மாயா தனது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு செய்திருப்பது

கழுகு பின்னணியில் 'கங்குவா' போஸ்டர்.. சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது லுக் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக

விஷால் அடுத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' என்ற படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ள

லைப்லாம் எப்படி போகுது? பிக்பாஸ் முடிந்ததும் மாயாவுக்கு செக் வைத்த பிரதீப்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில் அதில் அர்ச்சனா டைட்டில் பட்டம் வென்றார் என்பதும் அவருக்கு பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்தது என்பதும் தெரிந்தது