'சீதக்காதி' படத்தின் முக்கிய ரகசியத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதியின் 25வது படம் என்ற பெருமையுடன் கூடிய 'சீதக்காதி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் சமீபத்தில் திரையிட்டபோது, இந்த படத்தில் உள்ள முக்கிய டுவிஸ்ட் ஒன்றை பத்திரிகையாளர்கள் தங்கள் விமர்சனத்தில் சொல்ல வேண்டாம் என்று இயக்குனர் பாலாஜி தரணிதரன் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் அந்த ரகசியத்தை விஜய்சேதுபதியே இன்று வீடியோ ஒன்றின் மூலம் கூறியுள்ளார். 'சீதக்காதி' படம் விஜய்சேதுபதியின் 25வது படமாக இருந்தாலும் மூன்று மணி நேரம் ஓடும் இந்த படத்தில் விஜய்சேதுபதி இந்த படத்தில் முதல் 40 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவார். இந்த ரகசியத்தைதான் விஜய்சேதுபதி இந்த வீடியோவில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ஒரு கலைஞனுக்கு ஏற்படும் எண்ணத்தை ஒரு கலையின் மூலமாகத்தான் வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட இயக்குனர் பாலாஜி தரணிதரனுக்கான நன்றிக்கடன் தான் இந்த சீதக்காதி. இந்த படத்தில் நான் வெறும் 40 நிமிடங்கள் மட்டும் வந்தாலும் இந்த படத்தை என்னுடைய 25வது படமாகவும், என்னுடைய படமாகவும் கூற காரணம், 'இந்த படத்தில் நான் ஏற்று நடித்துள்ள அய்யா என்ற கலைஞனுக்காகவே. உலகத்தின் ஒவ்வொரு மூலையில் இருக்கும் உங்களையும் என்னையும் இணைக்கும் இந்த கலைக்கு என்னுடைய நன்றி' என்று விஜய்சேதுபதி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Makkal Selvan #VijaySethupathi on #Seethakathi#SeethakaathiFrom20thDec pic.twitter.com/7vc6XIZpJd
— Passion Studios (@PassionStudios_) December 19, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments