'சீதக்காதி' படத்தின் முக்கிய ரகசியத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Wednesday,December 19 2018]

விஜய்சேதுபதியின் 25வது படம் என்ற பெருமையுடன் கூடிய 'சீதக்காதி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் சமீபத்தில் திரையிட்டபோது, இந்த படத்தில் உள்ள முக்கிய டுவிஸ்ட் ஒன்றை பத்திரிகையாளர்கள் தங்கள் விமர்சனத்தில் சொல்ல வேண்டாம் என்று இயக்குனர் பாலாஜி தரணிதரன் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் அந்த ரகசியத்தை விஜய்சேதுபதியே இன்று வீடியோ ஒன்றின் மூலம் கூறியுள்ளார். 'சீதக்காதி' படம் விஜய்சேதுபதியின் 25வது படமாக இருந்தாலும் மூன்று மணி நேரம் ஓடும் இந்த படத்தில் விஜய்சேதுபதி இந்த படத்தில் முதல் 40 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவார். இந்த ரகசியத்தைதான் விஜய்சேதுபதி இந்த வீடியோவில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

ஒரு கலைஞனுக்கு ஏற்படும் எண்ணத்தை ஒரு கலையின் மூலமாகத்தான் வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட இயக்குனர் பாலாஜி தரணிதரனுக்கான நன்றிக்கடன் தான் இந்த சீதக்காதி. இந்த படத்தில் நான் வெறும் 40 நிமிடங்கள் மட்டும் வந்தாலும் இந்த படத்தை என்னுடைய 25வது படமாகவும், என்னுடைய படமாகவும் கூற காரணம், 'இந்த படத்தில் நான் ஏற்று நடித்துள்ள அய்யா என்ற கலைஞனுக்காகவே. உலகத்தின் ஒவ்வொரு மூலையில் இருக்கும் உங்களையும் என்னையும் இணைக்கும் இந்த கலைக்கு என்னுடைய நன்றி' என்று விஜய்சேதுபதி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More News

பிரபல கிரிக்கெட் வீரரின் கேரக்டரில் 'கனா' சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று முடிவடைந்த

சென்னையில் ஐந்து ரூபாய் டாக்டர் காலமானார். பொதுமக்கள் சோகம்

கடந்த 41 ஆண்டுகளாக வெறும் ஐந்து ரூபாய் பெற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராயபுரம் டாக்டர் ஜெயச்சந்திரன் இன்று காலமானார்.

ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய பாடகி சித்ராவின் பிரார்த்தனை வாழ்த்து!

தேசிய விருதுகள் பெற்ற பிரபல பின்னணி பாடகி சித்ரா இன்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த ஒரு பிறந்த நாள் வாழ்த்து ரசிகர்களை கண்ணீர் குளத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வர்: பழம்பெரும் நடிகை

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 'சென்னையில் திருவையாறு' என்ற நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்காக கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் வீர்ர்கள் ஏலம்: ரூ.5 கோடிக்கு பிரபல வீரரை ஏலம் எடுத்த சிஎஸ்கே

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஏலம் போன வீரர்கள் குறித்த தகவலை பார்ப்போம்