close
Choose your channels

இன்று மாலை 6 மணிக்கு 'இறைவி'யின் முக்கிய அறிவிப்பு

Wednesday, May 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீட்சா, ஜிகர்தண்டா என்ற இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படமான 'இறைவி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை வரும் ஜூன் 3ஆம் தேதி பூர்த்தி செய்யவுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, கருணாகரன், ராதாரவி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சுப்பிரமணியம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை ஏற்கனவே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு இறைவி படக்குழுவினர் ஒரு முக்கிய இண்ட்ரெஸ்ட்டிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அந்த இண்ட்ரெஸ்ட்டிங் தகவல் என்ன என்பதை அறிய இன்னும் சில மணி நேரங்கள் பொறுத்திருப்போம்.

பல வெற்றிப்படங்களை தயாரித்த சி.வி.குமார் 'இறைவி' படத்தை தயாரித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பீட்சா' படத்தையும் இவர்தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment