இன்று மாலை 6 மணிக்கு 'இறைவி'யின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 18 2016]

பீட்சா, ஜிகர்தண்டா என்ற இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படமான 'இறைவி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை வரும் ஜூன் 3ஆம் தேதி பூர்த்தி செய்யவுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, கருணாகரன், ராதாரவி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சுப்பிரமணியம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை ஏற்கனவே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு இறைவி படக்குழுவினர் ஒரு முக்கிய இண்ட்ரெஸ்ட்டிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அந்த இண்ட்ரெஸ்ட்டிங் தகவல் என்ன என்பதை அறிய இன்னும் சில மணி நேரங்கள் பொறுத்திருப்போம்.

பல வெற்றிப்படங்களை தயாரித்த சி.வி.குமார் 'இறைவி' படத்தை தயாரித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பீட்சா' படத்தையும் இவர்தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

10 வருட இடைவெளி ஏன்? கமாலினி முகர்ஜி விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசனுடன் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'வேட்டையாடு விளையாடு' படத்தில் நடித்த நடிகை கமாலினி...

சொன்னதை செய்தார் விஷால். ஒரு ஆச்சரிய தகவல்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் இந்த காலத்தில் விஷால்...

'சாட்டை' 2ஆம் பாகத்தில் முக்கிய வேடத்தில் கிஷோர்

சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில் ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த 'சாட்டை'...

சென்னை மாலில் ரஜினியின் '2.0 படப்பிடிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் டெல்லி படப்பிடிப்பு சமீபத்தில்...

விஷாலின் 'மருது' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்

விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் 'குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ள 'மருது'...