சென்னை காவல்துறை ஆணையருடன் விஜய்சேதுபதி சந்திப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 06 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பது மட்டுமின்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தரும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருவது தெரிந்ததே. ஒரு தனியார் தொலைக்காட்சியில் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பங்கு பெற்றதும் ஒருவகை விழிப்புணர்வுக்காகவே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் DIGICOP என்ற மொபைல் செயலியை இன்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த DIGICOP என்ற மொபைல் செயலி மூலம் திருடப்பட்ட இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை கண்டறிய முடியும். பொதுமக்களின் பயனுக்காக அறிமுகம் செய்யப்படும் இந்த மொபைல் செயலி அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டார்.

இந்த மொபைல் செயலி அறிமுகவிழாவில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் விஜய்சேதுபதி சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

'தல 59': அஜித் மகளாக நடிக்கின்றாரா ஸ்ரீதேவி மகள்?

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தந்தை-மகள் பாச செண்டிமெண்ட் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால்

சென்னை குப்பைக்கிடங்கில் கிடந்த இளம்பெண் கை,கால்கள்: திடுக்கிடும் செய்தி

சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவரின் கை, கால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்

'நடிகையர் திலகம்' பாணியில் மீண்டும் ஒரு கீர்த்திசுரேஷ் படம்

விஜய், விக்ரம், தனுஷ், விஷால் என குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும், அவருக்கு பெரும் புகழ் பெற்று தந்த படம் 'நடிகையர் திலகம்'

அரசியலில் குதிக்கும் விஜய்சேதுபதி!

கோலிவுட் திரையுலகில் தற்போது அதிகளவில் அரசியல் படங்கள் உருவாகி வருகிறது. விஜய்யின் 'சர்கார்', விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' போன்ற அரசியல் படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில்

நல்லா சாப்பிடுங்க, அப்படியே 'தளபதி 63' அப்டேட் கொடுங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில்