மீண்டும் முன்னணி இயக்குனருடன் இணையும் விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Saturday,March 19 2022]

தமிழ் திரையுலகின் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரே நேரத்தில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், சிறப்பு தோற்றம் என பல படங்களில் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ’பிசாசு 2’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ’கடைசி விவசாயி’ என்ற திரைப்படத்தை பார்த்து மிஸ்கின் அவரை நேரில் பாராட்டிய போது தான்’ மிஷ்கின் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

More News

திருமண நாளில் ஸ்ரேயா சரண் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண், ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சமந்தாவுடன் ஹாலிவுட் ஸ்டண்ட் பயிற்சியாளர்: வைரல் புகைப்படம்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று 'யசோதா' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

'ரெண்டுல ஒண்ணு பாக்கலாம், நிக்கிறியா தெம்பா': பீஸ்ட்' படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக்குத்து  பாடலின் தாக்கமே இன்னும் சமூக வலைதளங்களில் இருந்து விடுபடாத நிலையில் சற்று முன்னர் இரண்டாவது

உலகின் 8 நகரங்களில் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடிய நடிகை: வைரல் வீடியோ

'அரபிக்குத்து'  பாடலுக்கு உலகின் 8 நகரங்களில் நடனமாடிய வீடியோவை நடிகை ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விக்னேஷ் சிவனுக்கு அஜித் விதித்த இரண்டு நிபந்தனைகள்?

அஜித் நடிக்கவிருக்கும் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.