விஜய்சேதுபதியின் அடுத்த பட படப்பிடிப்பு முடிந்தது.

  • IndiaGlitz, [Thursday,September 06 2018]

ஒவ்வொரு வருடமும் கோலிவுட் திரையுலகில் அதிக படங்களை வெளியிடும் முன்னணி நடிகரான விஜய்சேதுபதி இந்த ஆண்டு இதுவரை 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், 'ஜூங்கா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் 'சீதக்காதி', 'செக்க சிவந்த வானம்', '96', 'சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி விஜய்சேதுபதி தற்போது ரஜினியின் 'தலைவர் 165' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'காக்கா முட்டை' இயக்குனர் மணிகண்டன் இயக்கி வரும் 'கடைசி விவசாயி' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தன்னுடைய பகுதி படப்பிடிப்பை விஜய்சேதுபதி தற்போது முடித்துவிட்டார்

70 வயது விவசாயி ஒருவரின் கதையை கூறும் இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.