close
Choose your channels

தமிழ் ரசிகர்களை விட வெறித்தனம்.. விஜய்யை ட்ரோன் எல்லாம் வச்சு படமெடுக்கும் கேரள ரசிகர்கள்..!

Wednesday, March 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக விஜய், திருவனந்தபுரம் சென்ற போது அவரை ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று விஜய் படப்பிடிப்பு முடிந்தவுடன் தமிழகம் மற்றும் புதுவையில் செய்தது போல் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார், இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழகத்தில் தான் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பார்கள் என்றால் கேரளாவில் தமிழக ரசிகர்களை விட அதிகமான அன்பு பாசத்துடன் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது இந்த நிகழ்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி விஜய் வேன் மீதேறி ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் போது பின்னணியில் ஒரு ட்ரோன் பறந்து கொண்டிருக்கும் காட்சி தெரிய வந்ததை அடுத்து ’என்னங்கடா ட்ரோன் எல்லாம் வச்சு படம் எடுக்குறீங்க, அரசியல்வாதிக்கு கூட இவ்வளவு மரியாதையை கேரளாவில் உள்ளவர்கள் செய்ததில்லையே’ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இனி வரும் நாட்களிலும் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நடக்கும் வரை தினமும் ரசிகர்களை விஜய் சந்திப்பார் என்றும் இதே போல் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் விஜய்க்கு மட்டுமின்றி வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்ற போதும் அவருக்கும் விஜய் ரசிகர்கள் மிகச் சிறப்பான வரவேற்பு கொடுத்ததாகவும் அது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment