விஜய்சேதுபதி, ராதிகாவுக்கு தேசிய விருது. பிரபல இயக்குனர் தகவல்

  • IndiaGlitz, [Saturday,March 12 2016]

'தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சீனுராமசாமி தற்போது 'தர்மதுரை' என்ற படத்தை இயக்கி வருகிறார். விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ஷிவேதா, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


இந்த படத்தில் தமன்னா, பக்கா மதுரை பெண்ணாக நடித்தது மட்டுமின்றி சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்துக்கு படம் தன்னுடைய நடிப்பில் மெருகேற்றி வரும் விஜய்சேதுபதிக்கு இந்த படத்தில் இதுவரை அவர் நடிக்காத சிறப்பான வேடம் என்றும் அவருக்கு அம்மாவாக நடித்துள்ள ராதிகா, இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் காசி விஸ்வநாதன் எடிட்டிங் பணிகளை மும்முரமாக செய்து வருவதாகவும், இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ள விஜய்சேதுபதி மற்றும் ராதிகாவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என அவர் கூறியதாகவும் இயக்குனர் சீனுராமசாமி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் தேசிய விருது வாங்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு மேற்கண்ட இருவருக்கும் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தலைப்பு

'கும்கி' படத்தில் அறிமுகமாகிய விக்ரம் பிரபு அதனை அடுத்து அரிமாநம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை, இவன் வேற மாதிரி...

ரஜினிக்கும் விஜய்க்கும் ஒரே வில்லன்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில்...

தஞ்சை விவசாயிக்கு குவியும் திரையுலக உதவிகள்

தஞ்சை விவசாயி பாலன் என்பவர் டிராக்டர் வாங்குவதற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல் போனதால் அவரை காவல்துறையினர் தாக்கியதாக...

'24' சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி-நேரம்

சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள ''24'' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து இணையதளத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை...

'மாப்பிள்ளை சிங்கம்' திரைவிமர்சனம் - டைம் பாஸ் காமெடி படம்

விமல் நடித்த கிராமிய பின்னணி கொண்ட படங்களில் 'மாப்பிள்ளை சிங்கம்' படமும் ஒன்று. ஒரு சீரியஸான விஷயத்தை கூட நகைச்சுவை மூலம் சிந்திக்க வைக்கும்....