விஜய்-சீமானின் 'பகலவன்' படத்தின் லேட்டஸ்ட் செய்தி

  • IndiaGlitz, [Sunday,February 26 2017]

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இயக்கத்தில் 'பகலவன்' என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக ஒருசில வருடங்களுக்கு முன்னர் கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்தடுத்து விஜய் படங்களில் பிசியானதாலும், சீமான் அரசியல் பணிகளில் பிசியானதாலும் இந்த படம் தள்ளிப்போய் கொண்டே இருந்தது

இந்நிலையில் தற்போது இந்த படம் மீண்டும் உயிர்த்தெழ உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆன்டனி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தின் முறையான அறிவிப்பை தயாரிப்பு தரப்பில் இருந்து மிக விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.