'விக்ரம்' மாதிரி ஒரு மாஸ் சீன் 'லியோ'வில்: ஸ்டண்ட் மாஸ்டர் தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,August 24 2023]

லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படமான ’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகிய மூவரும் இடைவேளை காட்சியின் போது தோன்றுவார்கள் என்பதும் அந்த காட்சி மிகவும் மாஸ் ஆக இருக்கும் என்பது தெரிந்ததே.

அதேபோல் ’லியோ’ படத்தில் விஜய், சஞ்சய்தத் மற்றும் அர்ஜுன் ஆகிய மூவரும் இருக்கும் காட்சி உள்ளது என்றும், இந்த காட்சி நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் இந்த படத்தில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர் தவசி தெரிவித்துள்ளார்.

அதேபோல் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் அறிமுக காட்சி, இன்டர்வல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தில் அட்டகாசமாக இருக்கும் என்றும் இந்த படத்தை சீட் முனையில் உட்கார்ந்து கொண்டு பார்க்கும் வகையில் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் இந்த படத்தின் கதையை விட்டு உங்களுடைய கவனம் வேறு எங்கும் செல்ல முடியாத அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.