ஏ.ஆர்.முருகதாஸ் சாதனையை முறியடித்த அட்லி

  • IndiaGlitz, [Tuesday,May 10 2016]

இளையதளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான 'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்று விநியோகிஸ்தர்களுக்கு நல்ல வசூலை தந்தது என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் படங்களில் அதிக வசூல் தந்த படங்களின் பட்டியலில் மேற்கண்ட இரண்டு படங்கள் முன்னணியில் இருந்தது. ஆனால் தற்போது இந்த பட்டியலில் விஜய்+அட்லி கூட்டணியின் 'தெறி' திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தமிழக அளவில் விநியோகிஸ்தர்களுக்கு அதிக லாபம் தந்த படமாக இருந்த 'எந்திரன்' பட சாதனையை 'தெறி' முறியடித்தது என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் விஜய் படங்களிலேயே அதிக வசூல் தந்த படமாக தற்போது 'தெறி' முதலிடத்தை பெற்றுள்ளது.
மேலும் கடந்த வெள்ளியன்று வெளியான '24' படம் வெளிவந்து நல்ல ரிசல்ட்டை பெற்றபோதிலும் 'தெறி' படம் 25வது நாட்களை கடந்து இன்னும் நல்ல வசூலை பெற்று வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக அதிக வசூல் பெற்ற படமாக 'தெறி' விளங்கி வரும் நிலையில் இந்த சாதனையை எந்த படம் முறியடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' ரிலீஸ் தேதி

விஷ்ணு நடித்த 'முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள நகைச்சுவை படமான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டதை ஏற்கனவே பார்த்தோம்.....

சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது....

தேர்தலில் விஜய் ஆதரவு யாருக்கு

இளையதளபதி விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது....

தேர்தலுக்காக பிரபுதேவா பாடிய கானா பாடல்

வரும் 16ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து வாக்காளர்கள் பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல புரமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.....

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் பாபிசிம்ஹா

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த ''மனிதன்'' திரைப்படம் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே....