ஒரே நாளில் 260 காட்சிகள். சென்னையில் தெறிக்க வைக்கும் 'தெறி'

  • IndiaGlitz, [Tuesday,April 12 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை மறுநாள் முதல் உலகமெங்கும் தெறிக்கவுள்ள நிலையில் சென்னையில் சற்று கூடுதலாக 'தெறி' படம் தெறிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை நகரில் 'தெறி' திரைப்படம் நாள் ஒன்றுக்கு 260 காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சத்யம் திரையரங்குகளில் 104 காட்சிகளும், ஏஜிஎஸ் திரையரங்குகளில் 60 காட்சிகளூம், LUxe திரையரங்குகளில் 33 காட்சிகளும், தேவி திரையரங்க காம்ப்ளக்ஸில் 18 காட்சிகளும், அபிராமி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 15 காட்சிகளும், உதயம் காம்ப்ளக்ஸில் 14 காட்சிகளூம், சங்கம் திரையரங்கில் 13 காட்சிகளும் திரையிடப்படவுள்ளது.

கோலிவுட் திரைப்படம் ஒன்று சென்னையில் மட்டும் 260 காட்சிகள் திரையிடப்படுவது என்பது ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. மேலும் 'தெறி' ரிலீசாகும் ஏப்ரல் 14, அரசு விடுமுறை என்பதாலும் அதனையடுத்து வார இறுதி நாட்கள் வருவதாலும் நான்கு நாட்கள் வசூலிலும் 'தெறி' தெறிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்யின் 61-வது, 62-வது படங்களை இயக்குபவர்கள் யார்?

இளையதளபதி விஜய் நடித்த 59வது படமான 'தெறி' நாளை மறுநாள் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. மேலும் அவருடைய 60வது படத்தின்...

இளையதளபதி விஜய்யின் 'தெறி'. ஒரு முன்னோட்டம்

இளையதளபதி விஜய்யின் தெறி திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்களிடையே பரபரப்பு அதிகரித்து...

தெறி ஸ்டண்ட் காட்சிகளுக்காக விஜய் எடுத்த ரிஸ்க். திலீப் சுப்பராயன்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

'தெறி' படத்தின் கடைசி நிமிட திடீர் மாற்றம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது 100% உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் படமான 'போலீஸ் ஒஹ்டு...

கமல்ஹாசன்-ஸ்ருதிஹாசன் படம் ஆரம்பமாகும் தேதி

'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் இடைவெளி விட்ட உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது அடுத்த படத்தை தொடங்கவுள்ளார்....