சென்னையில் 'ஐ' சாதனையை முறியடித்தது விஜய்யின் 'தெறி'

  • IndiaGlitz, [Friday,April 15 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நேற்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வசூல் பல சாதனைகளை தகர்த்தெறியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் ஆரம்பமாக முதல் நாளில் சென்னையில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும், முதல் நாளில் ரூ.1 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

சென்னையில் 'தெறி' திரைப்படம் நேற்றைய முதல் நாளில் 20 திரையரங்க வளாகங்களில் 272 காட்சிகள் ஓடியது. முதல் நாளின் மொத்த வசூல் ரூ.1,04,98,350 என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த தமிழ்ப்படமும் சென்னையில் முதல் நாளில் ரூ.1 கோடி வசூலை பெற்றது இல்லை. ஷங்கரின் பிரமாண்டமான படமான 'ஐ' திரைப்படம் சென்னையில் முதல் நாளில் ரூ.84 லட்சம் வசூல் செய்ததே இதுவரை அதிகப்படியான வசூல் தொகையாக இருந்தது.

மேலும் கோடை விடுமுறை, போட்டிக்கு வேறு எந்த படங்களும் இல்லாத நிலை, பாசிட்டிவ் விமர்சனங்கள், வார இறுதி ஆகிய காரணங்களால் 'தெறி' திரைப்படம் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நடிகர் சங்கத்துடன் மீண்டும் இணையும் கமல்-ஸ்ருதி

'தூங்காவனம்' படத்தை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் தொடக்கவிழா ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது...

விஷாலின் 'மதகஜராஜா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்து முடித்துள்ள 'மருது' திரைப்படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள

பிரசாந்த் நடிக்கும் அடுத்த பட டைட்டில் இதுதான்....

ஒரு காலத்தில் அஜித், விஜய்க்கு நிகரான ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வந்த நடிகர் பிரசாந்த் இடையில் ஏற்பட்ட ஒருசில பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் இருந்து...

ஒரு முகம் முடிந்தது. அடுத்த முகம் விரைவில்...

சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

அரவிந்தசாமியின் முனிவர் முடிவு ஏன்?

ரோஜா, பம்பாய் போன்ற பல படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்ற நடிகர் அரவிந்தசாமி கடந்த ஆண்டு வெளியான 'தனி ஒருவன்'...