தவெக மாநாட்டிற்கு பின் தாங்கொணா துயரில் தவித்த விஜய்.. வேதனை அறிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சமீபத்தில் நடந்த நிலையில் இதில் விஜய் பேசிய ஒரு மணி நேர பேச்சு தமிழக அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த மாநாட்டிற்கு வரும் போதும், மாநாடு முடிந்தவுடன் வீட்டுக்கு திரும்பும் போதும் ஏற்பட்ட விபத்துகளில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எடுத்து தாங்கொணா துயரத்தில் ஆழ்ந்த விஜய் வேதனையுடன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,
வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்
திரு. JK.விஜய்கலை,
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்
திரு. வசந்தகுமார்,
கழகத் தோழர்
பாரிமுனை, சென்னை
திரு. ரியாஸ்,
கழகத் தோழர்,
பாரிமுனை, சென்னை.
திரு. உதயகுமார்,
கழகத் தோழர்,
செஞ்சி
மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த
திரு.சார்லஸ்
கழகத் தோழர்,
வில்லிவாக்கம்,
சென்னை
ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.
கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,
— TVK Vijay (@tvkvijayhq) October 28, 2024
வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்
திரு. JK.விஜய்கலை,…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments