சென்னை சாலையில் சொகுசு காரில் சென்றாரா விஜய்? வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் சென்னை சாலைகளில் விலை உயர்ந்த சொகுசு காரில் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தளபதி விஜய் அவ்வப்போது சென்னை சாலைகளில் காரில் வலம் வருவார் என்பது தெரிந்ததே. பல நேரங்களில் ரசிகர்கள் அவர் காரில் செல்லும்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதேபோல் நேற்று சென்னையில் உள்ள முக்கிய சாலை ஒன்றில் அவர் ரோல்ஸ் ராய்ஸ் என்ற விலையுயர்ந்த சொகுசு காரில் சென்றதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோவில் உள்ளே இருப்பது விஜய் தானா என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் அந்த கார் விஜய்யின் கார் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் அந்த காரில் ஒரே ஒருவர் மட்டுமே இருந்தார் என்று கூறப்படுவதால் விஜய் தான் அந்த காரை ஓட்டி சென்று இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருவதால் பெரும் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் தற்போது ’பீஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது என்பதும் இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thalapathy Vijay Car has been spotted on chennai outside #Beast #Vijay @actorvijay @CMOTamilnadu @Nelsondilpkumar pic.twitter.com/fP9O7ysrUw
— bsafhi (@bsafhi3_) June 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com